வலசை பறவைகள் சீசன்

சென்னை அருகே பழவேற்காடில், வழக்கத்தைவிட இந்தாண்டு முன்கூட்டியே, அரிய வகை வலசை பறவைகள், முகாமிட துவங்கியுள்ளன.ஆர்ட்டிக், ஐரோப்பிய நாடுகளில் குளிர் அதிகரிக்கும்போது, பறவைகள் தெற்கு நோக்கி வலசை வருவது வழக்கம். இப்பறவைகள், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை துவங்கும்போது தான், தமிழகத்துக்கு வருகை தரும்.இந்தாண்டு, அக்டோபர் இரண்டாவது வாரத்தில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதற்கு முன்னதாகவே, திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில், வலசை பறவைகள் முகாமிட்டுள்ளன.

இவ்வகையில், பழவேற்காடு நீர்நிலையின் ஒரு பகுதியான அண்ணாமலைசேரியில், பூநாரை, கல்திருப்பி உள்ளான், பெரிய கொசு உள்ளான், மண் கொத்தி என, 70 வகை பறவைகள் முகாமிட்டுள்ளன.இவற்றை காண பறவை ஆர்வலர்கள், அப்பகுதிக்கு வரத்துவங்கியுள்ளனர்.இது குறித்து, ‘தி நேச்சர் டிரஸ்ட்’ அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:நீண்ட தொலைவு பறந்து வரும் பழக்கம் உடைய, பெரிய கொசு உள்ளான் இங்கு காணப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின், இப்பறவை தற்போது இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உணவு தேடல் மட்டுமல்லாது, இனப்பெருக்கத்துக்காகவும், பெரிய கொசு உள்ளான் இங்கு வந்துள்ளது. அதன் உடல் நிற மாறுதல் வாயிலாக தெரிகிறது. இது பழவேற்காட்டின் சூழலியல் பாதுகாப்பாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here