“நம்ப முடியவில்லை”-சிகரெட் பிடிக்கும் நண்டு

நண்டு ஒன்று புகைப்பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இணையத்தில் பலவிதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்படும். சமீபத்தில் தாய் ஒருவர் தன் மகனுக்கு குட்டி நாய் ஒன்றை வாங்கிக்கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. பலர் அந்த வீடியோவைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர். அந்தவகையில், தற்போது நண்டு ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் நண்டின் வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், நண்டு சிகரெட்டை தன் வாயில் வைத்து புகைப்பிடிக்கிறது. தன்னை யாரோ வீடியோ எடுப்பதை உணர்ந்த நண்டு அந்த சிகரெட்டை கீழே போடாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து செல்கிறது. அந்த வீடியோவைப் பதிவிட்டு, “நண்டு சிகரெட் பிடிக்கிறது. இது ஒரு கெட்ட கனவு போன்றது. மனிதர்கள் தூக்கி எறிந்ததை இந்த நண்டு பயன்படுத்துகிறது. நமது அணுகுமுறையால் எந்த சுற்றுச்சூழல் அமைப்பையும் நாம் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்த நிலையில், தற்போதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். அந்த வீடியோவைப் பார்த்த பலர் மிகவும் வேதனையுடன் கருத்து பதிவிட்டுள்ளனர். “புகைப்பிடித்தல் மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆனால், தற்போது மனிதர்களால் விலங்குகளும் சிகரெட்டை புகைக்கிறது” என்று பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலரோ, “இதை நம்பவே முடியவில்லை” என பதிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here