பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி காலமானார்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவால் காலமானார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன என்றும் விரைவில் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என்றும் வீடியோவில் அவர் பேசி இருந்தார்.

விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், திடீர் என எஸ்.பி.பி உடல் நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது. இது ஒட்டு மொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது..இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார் .

இவரது தாயார் கடந்த 2019 பிப்ரவரி மாதம் தான் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here