உக்ரைனில் ராணுவ விமானத்தில் ஏற்பட்ட விபத்தில்…

உக்ரைன் நாட்டில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொருங்கியதில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

25க்கும் மேற்பட்டோருடன் உக்ரைன் நாட்டில் ராணுவ விமானம் ஒன்று நேற்று பயணம் செய்துள்ளது. அப்போது விமான தளத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் விமானம் சட்டென்று கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதனால் விமானத்தில் பயணம் செய்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர், மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். விபத்து குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் உக்ரைனில் ஏற்பட்ட ஒரு விமான விபத்தில் 176 பேர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் இரண்டாவதாக மீண்டும் இந்த சம்பவம் ஏற்பட்டு உள்ளதால் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here