சுஷாந்த் சிங்க் மரணம் 200% கொலை -வழக்கறிஞர் பதில்!

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை அல்ல கொலை தான் என எய்ம்ஸ் மருத்துவர் கூறியதாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் ஆகிய சுஷாந்த் சிங்க் அண்மையில் தற்கொலை செய்து உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியது. தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் தான் எனவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அவரது குடும்பத்தினர் அவரது மரணம் தற்கொலை அல்ல கொலை என வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் யாரென கண்டுபிடிக்க இவ்வளவு தாமதம் ஆகிறதா என தற்போது நடிகர் சுஷாந்த் அவர்களின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்களின் குடும்ப வக்கீலான விகாஸ் சிங் கூறுகையில், சுஷாந்த் மரணத்தை அடுத்து அவரது சடல புகைப்படத்தை எய்ம்ஸ் மருத்துவர் ஒருவருக்கு அனுப்பி வைத்ததாகவும் அதை ஆய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவர் சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல 200% அது கொலை என தெரிவித்துள்ளார். மேலும் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்ததாக வழக்கறிஞர் தற்பொழுது பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here