சமுதாய சேவைகள் அனைத்தையும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் – ஷாகுல் ஹமீது கேட்டு கொண்டார்

மலேசியாவில் சிறுபான்மை இனமாக இந்திய முஸ்லிம் சமுதாயம் விளங்குகிறது.

குறிப்பாக வர்த்தகத்தில் இந்திய முஸ்லிம்கள் சீனர்களுக்கு நிகராக இருந்து வருகின்றனர். இச்சாதனை தொடர வேண்டும். அதற்கு நமது வர்த்தகம், சமுதாய சேவைகள் அனைத்தையும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று எச்ஆர்டிஎப் தலைமை செயல்முறை அதிகாரி ஷாகுல் ஹமீது கூறினார்.

அதே வேளையில் மலேசியாவில் இந்திய முஸிம்கள் நிகழ்த்தியுள்ள சாதனைகள் அனைத்தும் ஆவண தொகுப்பாக வெளியிடப்பட வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

சிம் எனப்படும் கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய முஸ்லிம் நட்புறவு சங்கத்தின் இரண்டாம் ஆண்டு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஷாகுல் ஹமீது தலைமையேற்றார்.

இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையை அடிப்படையாக கொண்டு சிம் இயக்கம் செயல்ப்பட்டு வருகிறது.

இச்சங்கத்திற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும். அதே வேளையில் இளைஞர்களும் அதிகம் இவ்வியக்கத்தில் இணைய வேண்டும் என்று சிம் இயக்கத்தின் தலைவர் ஹாஜி சையது முகமட் புகாரி கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here