கிளந்தான் எல்லையில் பெத்தாய் (Petai) கடத்தல் முறியடிப்பு

கோலாலம்பூர்:

கிளந்தான், ரந்தாவ் பாஞ்சாங் அருகே உள்ள கம்போங் லுபோக் கோங் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற சோதனையில், சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 30 பொட்டலம் பெத்தாய் (Petai) பறிமுதல் செய்யப்பட்டது.

பொது நடவடிக்கைப்படை (GOF) மேற்கொண்ட வழக்கமான எல்லை ரோந்துப் பணியின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த புரோட்டான் வீரா (Proton Wira) கார் நிறுத்தப்பட்டது.

முறையான ஆவணங்கள் இன்றி பெத்தாய் கொண்டு வந்த 40 வயதுள்ள உள்ளூர் நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து வாகனம் மற்றும் பெத்தாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன, அவற்றின் மொத்த மதிப்பு சுமார் RM12,400 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பெத்தாய் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும், அவற்றில் பூச்சிகள் மற்றும் நோய்த்தொற்றுகள் இருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக நடவடிக்கைக்காக கிளந்தான் வேளாண்மைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தாவர தனிமைப்படுத்தல் சட்டம் 1976-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here