மாமனார் வீட்டில் மருமகன் இறப்பு

மாமனார் வீட்டில் மருமகன் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காஞ்சிபுரம், காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்,29; காஞ்சிபுரம் பெருநகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 26ம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது மனைவியுடன் புதுச்சேரி,கோரிமேடு காமராஜர் நகர் கென்னடி வீதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்தார்.அங்கு அன்று மாலை பிறந்த நாளை கொண்டாடிவிட்டு இரவு 11.30 மணிக்கு துாங்க சென்றார்.

நேற்று காலை 5:50 மணியளவில் மகேஸ்வரி, கணவர் வெங்கடேைஷ எழுப்பியபோது, அசைவற்று கிடந்தார். திடுக்கிட்ட மகேஸ்வரி, தனது தந்தை சஞ்சீவி உதவியுடன், வெங்கடேைஷ ஜிப்மருக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, வெங்கடேஷ் மாரடைப்பால் இறந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here