உறுதிசெய்யப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்கள்தானா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் இறுதி பட்டியல் கசிந்துள்ளது. ஏற்கெனவே வெளியான தகவலின்படி சனம் ஷெட்டி, ஷிவானி நாராயாணன், கேப்ரில்லா, நடிகை ரேகா, ரம்யா பாண்டியன், தொகுப்பாளர் அர்ச்சனா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது இதில் புதிதாக அறந்தாங்கி நிஷாவின் பெயரும் இணைந்துள்ளது. அவரும் இந்தமுறை போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஆண் போட்டியாளர்களாக பாடகர் ஆஜித், வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ், அனுமோகன் உள்ளிட்டோரும் போட்டியாளர்களாக களமிறங்குகின்றனர். பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்கள் குறித்த பெயர் பட்டியல் இணையத்தில் கசிந்திருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் உண்மை தெரிந்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தமுறை கொரோனா அச்சுறுத்தலால் தாமதமாகியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக போட்டியாளர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த முறையும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 சீசன்களிலும் வார இறுதி நாட்களில் பார்வையாளர்களை அனுமதித்து வந்த நிகழ்ச்சிக்குழு இந்த சீசனை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here