ஒரு நாளைக்கு 87 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்!

உத்தர பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் சில ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேசிய குற்ற பதிவுகள் காப்பகம் வெளியிட்டுள்ள ‘இந்தியாவில் குற்றங்கள் 2019’ என்ற அறிக்கை மேலும் அதிர்ச்சியை அதிகரிக்க செய்துள்ளது. 2019ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தமாக 4,05,861 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவானது 2018ஐ விட 7.3 சதவீதம் அதிகம் ஆகும். ஒரு நாளைக்கு தோராயமாக 87 பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆண்டிற்கு 7 சதவீதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here