மலாக்காவில் அதிகரித்து வரும் டெங்கு

மலாக்கா: சமீபத்திய மூன்று உறுதி செய்யப்பட்ட கோவிட் -19 சம்பவங்களை  ஒப்பிடுகையில் மலாக்காவில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

மாநில சுகாதார மற்றும் போதைப்பொருள் தடுப்பு குழுவின் தலைவர் ரஹ்மத் மரிமன் கூறுகையில் மலாக்காவில் டெங்கு நோயாளிகள் 453 சம்பவங்களாக அதிகரித்துள்ளன.  அல்லது ஜனவரி 1 முதல் செப்டம்பர் 26 வரை 2,119 சம்பவங்களில் இருந்து 27.19% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

ஜாசின் மற்றும் அலோர் காஜா  ஆகிய இடங்களை தொடர்ந்து மலாக்கா தெங்கா  பகுதியில்  அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.

எனவே, பூஜ்ஜிய கோவிட் -19 சம்பவங்களை உறுதி செய்வதற்காக சிறப்புக் குழுவை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இரு நோய்களையும் முறியடிக்க மாநில சுகாதாரத் துறை செயல்பட்டு வருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here