முதியோர் இல்லங்களில் சேர்க்கும் அவலம்

வரமாக பெற்ற பிள்ளைகள்… இன்று தாரை வார்த்து கொடுக்குது முதியோர் இல்லங்களில். இனியேனும் முதியோரை காப்போம். காப்பகங்களில் அல்ல, உறவுகள் குடியிருக்கும் இல்லங்களில்… முதியோரில் தமிழகம் 2ம் இடம் நம் நாட்டில் தான் 60 வயது நிரம்பியவரை முதியோர் என்கிறோம். ஆனால், ஆஸ்திரேலியா, சுவீடன், டென்மார்க்கில்இவர்கள் நடுத்தர வயதினர். 2011 கணக்கெடுப்பு படி இந்தியாவில் 10.5 சதவீதம் முதியோர் உள்ளனர்.இதில், முதலிடத்தில் கேரளா, 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. 2017 ல் ‘எங்கள் பெரியவர்களை பராமரித்தல்’ என்ற ஆய்வறிக்கை இந்திய அளவில் 11.2 சதவீத முதியோர் இருப்பதாக கூறியது.

கிராமங்களில் முதியோர் அதிகம்அதில் 75 சதவீதம் பேர்கிராமங்களில் வசிக்கின்றனர். வறுமை கோடு, எழுத்தறிவு இன்றி, கூலி தொழிலாளர்கள், முதியோராக வாழ்ந்து வருகின்றனர். இதில், 10 சதவீதம் பேர் மட்டுமே பென்ஷன் பெறுகின்றனர். முதியோர் உடல், உணர்ச்சி, பொருளாதாரம், குடும்ப உறுப்பினர்களால் கொடுமைக்கு ஆளாகின்றனர். உலக சுகாதார அமைப்பு, முதியோர் புறக்கணிப்பு, தனிமை, சட்ட, மருத்துவ, மனித உரிமையற்ற நிலை போன்ற காரணத்தால் வெறுப்புக்கு ஆளாகின்றனர்.ரூ.10 ஆயிரம் வழங்கும் சட்டம்இதுபோன்ற முதியோர் நலனுக்காக அரசு உதவி எண் 1800, 180, 1253ல் அழைக்கலாம் என்பது குறித்து 16 சதவீத முதியோருக்கு தான் தெரிகிறது. முதியோரை பராமரிக்க பல சட்டங்கள் இருப்பினும், தன் வாரிசுகள் பராமரிக்க தவறினால் மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும் என்ற சட்டம்உள்ளது.

இவ்விபரம் கூட 14 சதவீத முதியோருக்கு தான் தெரிகிறது. இவர்கள் மனநிலை, முதுமை, உடல் பலவீனம், ஞாபகமறதி, எரிச்சல், கோபம், வியாதி, உடல் தளர்வு, தனிமை, வறுமை போன்ற மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். எனவே முதியோரை பாதுகாத்து, அவர்களது ஆசியுடன் ரத்தசொந்த பந்தங்களை பாசத்துடன் வளர்ப்போம். உலக முதியோர் தினமான இன்று சபதம் ஏற்போம், என கே.ஜவஹர், தலைவர், தமிழ் சங்கம், சிவகங்கை, தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here