ஒரு பெண்ணை விமர்சனம் செய்ய உங்களுக்கு வெட்கம் இல்லையா?

சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இவர் கடந்த சில மாதங்களாகவே தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஒருபுறம் ஆதரவு அளித்தாலும் பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமான ஷிவானி நாராயணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘எனது பதிவில் மூன்றாம் தரமான கருத்துக்களை கமெண்ட் செய்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யூடியூப்பில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் ஒருசிலர் என்னைப்பற்றி மலிவாக விமர்சனம் செய்கின்றனர். இது போன்று ஒரு பெண்ணை விமர்சனம் செய்ய உங்களுக்கு வெட்கம் இல்லையா?. நான் என்ன ஆடைகளை அணிய வேண்டும் எதை அணியக் கூடாது என்று எனக்கு தெரியும். என்னுடைய பெற்றோர்கள் என்னை நன்கு வளர்ந்து உள்ளார்கள். நான் எதையும் சுயமாக தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தை எனக்கு அவர்கள் கொடுத்துள்ளார்கள்.

நான் பதிவு செய்யும் புகைப்படங்கள், ஆடும் நடனங்கள் இவை அனைத்துமே யாரையும் கவர்ந்திழுக்கும் நோக்கத்திற்கு அல்ல. அதுபோன்ற அவசியமும் எனக்கு இல்லை. என்னுடைய சுய விருப்பத்தினால் நான் அதை பதிவு செய்து வருகிறேன். எனவே மோசமான விமர்சனங்கள் செய்து என்னை காயப்படுத்த முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு முயற்சித்தால் நீங்கள் தோல்வி அடைவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here