வெள்ளம், நிலச்சரிவு காரணமாக கிளாந்தானில் 14 வழித்தடங்கள் மூடப்பட்டன

கோத்தா பாரு, பிப்ரவரி 27 :

கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, கிளாந்தானில் மொத்தம் 14 வழித்தடங்கள் மூடப்பட்டன மற்றும் அப்பகுதியில் இரண்டு நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பொதுப்பணித் துறையின் (JKR) பேரிடர் மேலாண்மையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://bencanaalam.jkr.gov.my மூலம், பாசீர் மாஸில் உள்ள 5 வழித்தடங்கள் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளன.அதாவது ஜாலான் எஸ்கே குவால் தோக் தேஹ், ஜாலான் பாங்கோல் கூலிம், ஜாலான் பெங்கலான் ராகிட் – பத்து காராங், ஜாலான் செக்கோலா சீனா மற்றும் ரந்தாவ் பாஞ்சாங்கிற்கு அருகிலுள்ள ஜாலான் பூங்கா ராயா ஆகிய வழித்தடங்களே அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளன.

அதனைத்தொடர்ந்து, தானா மேராவில் உள்ள ஜாலான் பங்லிமா பாயு – ரந்தாவ் பாஞ்சாங், ஜாலான் மாசுக் வனச் சோதனை நிலையம் – குபோர் கம்போங் நிபோங் மற்றும் ஜாலான் தானா மேரா – குசியால் – கம்போங் ஈப்போ – பத்து 8 ஆகிய 3 வழித்தடங்கள் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளன.

மேலும் கோலக்கிராயில், ஜாலான் ஜிராட் மற்றும் ஜாலான் புக்கிட் சிரேஹ் – கம்போங் பெடல் – கோல நல் ஆகிய வழித்தடங்களும், மச்சாங்கில் ஜாலான் சுங்கை மத்தி – கேராவாங் மற்றும் ஜாலான் பங்கல் மெலரெட் – லிமாவ் ஹன்டு ஆகிய வழித்தடங்களும் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளன.

பாசீர் பூத்தேயில், ஜாலான் செமராக் சாலை அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது, மேலும் தும்பாட்டில், கோத்தா பாரு – பாசீர் மாஸ் – ரந்தாவ் பாஞ்சாங் எனப்படும் கூட்டரசு சாலையை உள்ளடக்கியது.

இதற்கிடையில், கிளாந்தானில் இரண்டு நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன, தானா மேராவில் உள்ள ஜாலான் ஃபெல்டா கெமாஹாங், இந்த பாதை அனைத்து வாகனங்களுக்கும் ஒரு வழிக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது மற்றும் ஜாலான் டாரி சிம்பாங் கோல நல் (பாசீர் எரா முதல் தெமாங்கான் வரை) கோலக்கிராய் மற்றும் மச்சாங் எல்லை என்பனவும் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here