டத்தோ டாக்டர் அஹ்மத் மஸ்ரிசல் முஹம்மதுவிற்கு கோவிட் தொற்று

பெட்டாலிங் ஜெயா: சபாவிலிருந்து திரும்பியதும் துணை சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சர் டத்தோ டாக்டர் அஹ்மத் மஸ்ரிசல் முஹம்மது கோவிட் -19  உறுதி செய்யப்பட்டுள்ளது.

செனட்டருமான அவர் தற்போது ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மற்றும் நிலையான நிலையில் உள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அக்டோபர் 1 ஆம் தேதி சபா மாநிலத் தேர்தலில் பிரச்சாரம் செய்து திரும்பிய இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் அறிகுறிகளுடன் வந்தார். இப்போது அவர் கோவிட் -19 உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்பொழுது  அவர் நன்றாக குணமடைந்து வருகிறார் என்று அறியப்படுகிறது.

தற்போதைய அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அகமட்   ஜாஹிட் ஹமீடியின் அரசியல் செயலாளராக இருக்கும் டாக்டர் அஹ்மத் மஸ்ரிசால், மாநிலத் தேர்தல்களில் பாரிசன் நேஷனலுக்கு உதவ சபாவுக்கு சென்றிருந்தார்.

முன்னதாக, அம்னோ இளைஞர் துணைத் தலைவர் ஷாஹில் ஹம்தான் மற்றும் உச்ச சபை உறுப்பினர் ரஸ்லான் ரஃபி ஆகியோர் சபாவிலிருந்து கோலாலம்பூருக்கு திரும்பியதும் கோவிட் -19  சோதனை செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here