1980களின் காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்த அமலா 30 வருடங்களுக்கு பிறகு தற்போது தமிழில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழர்களின் மனதில் நிறைந்திருக்கும் அமலா, கடந்த 1992ஆம் ஆண்டு நடிகர் நாகர்ஜூனாவை காதல் திருமணம் செய்து ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். இவர், தமிழில் கடைசியாக கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான கற்பூர முல்லை படத்தில்தான் நடித்திருந்தார்.
திருமணமானதால் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது, 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.
சிங்கம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் , நான் மகான் அல்ல , தீரன் அதிகாரம் ஒன்று , ராட்சசி என பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த எஸ் . ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க அமலா ஒப்பந்தமாகியுள்ளார் .
இப்படத்தில் , எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்த் , ரீத்து வர்மா , சதீஷ் , ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள்.