தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப்போற்று திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தை இறுதிச்சுற்றில் படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயற்றியுள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் டைட்டில் லுக் வெளியாகியுள்ள நிலையில் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வாடிவாசல் கெட்டப் என சூர்யாவின் வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் ரசிகர்களிடையே இன்னும் பல கெட்டப்புகளில் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
@single_thozha#maaralovers #suriya #suriyasivakumar #suriyavideos #suriyaanna #anbaanafans #suriyafans #suriyajothika #suriyaism #suriyabirthdaycdp #nadippinnayagansuriya #nadippinnayagan #vaadivaasal #vaadivasal #suryafan #suriyaveriyan #fanofsuriya #sooraraipottru #vadivasal pic.twitter.com/qxbxnIb2gD
— Single_Thozha_creation (@Saravan76572869) September 10, 2020