தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கைதி திரைப்படம் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வெற்றி படமாக அமைந்தது.
இந்த படங்களை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தியின் மனைவி ரஞ்சனி தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இச்செய்தி சிவகுமாரின் குடும்பத்தை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாம்.
இவர்கள் இருவருக்கும் இதற்கு முன்பாகவே முதல் குழந்தையாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த பெண் குழந்தையின் பெயர் ‘உமையாள்’ என்பது குறிப்பிடத்தக்கது.