அறுவடைத் திருவிழாவை முன்னிட்டு சிறைக்கைதிகள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதி

வரும் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் அறுவடைத் திருவிழாவையொட்டி, சபா மற்றும் சரவாக்கில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளைப் பார்வையிட அவர்களின் குடும்பத்தினருக்கு அனுமதியளிக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பு நாட்களில் காலை 8.15 முதல் மாலை 4.15 வரை பார்வையிடும் நேரம் என சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “பார்வையாளர்கள் RT-PCR அல்லது ARTK-Ag சோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டும், அவை மாதிரி சேகரித்த பிறகு மூன்று நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும், அந்த முடிவுகள் கோவிட்-19க்கு சாதகமான அறிகுறியற்றதாக இருக்க வேண்டும்.

“பார்வையாளர்கள் விசிட்டிங் கார்டு மற்றும் அடையாள அட்டையையும் கொண்டு வர வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, பார்வையாளர்கள் சிறைச்சாலைச் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, அவர்களை சிறைச்சாலை அதிகாரிகள் சிறைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் போது உடல் ரீதியான சோதனையை மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேருக்கு நேர் சந்திப்புகளில் கலந்து கொள்ள முடியாத குடும்பங்களுக்கான இணையத்தின் மூலமான சந்திப்புகள் ஜூன் 6 முதல் 8 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here