ஶ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பில் பிளோக் 70, செராஸ் என்ற பகுதியில் நண்பகல் 1.30 மணியளவில் கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இக்கொலை சம்பவம் குறித்து கொலையுண்டவரின் சகோதரர் விஜயகுமார் ( வயது 57) கூறுகையில் தான் கிளானா லாமா இல் பணியிலிருந்ததாகவும் வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தவுடன் விரைந்து வந்துள்ளார்.
அவர் வந்து பார்த்தபோது மின் தூக்கி அருகில் தம்பி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாகவும் கொலை குறித்து அவரிடம் கேட்டபோது நண்பருடன் ஏற்பட்ட தகராற்றின் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் இது குறித்த மேல் விசாரணையை போலீசாரிடமே விட்டு விடுவதாகவும் கூறினார்.
கொலையுண்ட ஆடவரின் பெயர் ரகு சுப்பையா (வயது 52) என்றும் திருமணமாகாத அவர் பாதுகாவலராக பணியாற்றி வந்ததாக அறியப்படுகிறது.
கொலையுண்ட நபரும் அவருடன் தகராற்றில் ஈடுபட்ட நபரும் ஶ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர்கள் என்று அறியப்படுகிறது. அவரின் உடல் சவபரிசோதனைக்காக செராஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.