ராகவா லாரன்ஸுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலிவுட்..

தமிழில் சூப்பர் ஹிட்டாகிய ‘காஞ்சனா’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் ‘லட்சுமி பாம்’ என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள இப்படத்தில் பாலிவுட் ஸ்டார் நடிகர் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார்.

திருநங்கையாக அக்‌ஷய் குமார் நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியானது.

அக்ஷய் குமாரின் திரைப்பயணத்தில் இந்த படம் மிகப்பெரும் சவாலான கதாபாத்திரமாக அமையும் என இப்போதே விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வரும் தீபாவளி தினத்தில் ஹாட் ஸ்டார் தளத்தின் வழியாக இப்படம் வெளியாகவுள்ளது.

ஆனால், இப்படத்தை புறக்கணிப்போம் என பாலிவுட் ரசிகர்கள் டிவிட்டரில் கூறிவருகின்றனர். இதற்காக #BoycottLaxmiBomb என்கிற ஹேஷ்டேக்கையும் டிரெண்டிங் ஆக்கியுள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அக்‌ஷய்குமார் அவருக்கு ஆதரவாக பேசவில்லை என்பதால் அவர் நடிக்கும் திரைப்படங்களை பார்க்க மாட்டோம் எனவும் பலரும் கூறிவருகின்றனர். மேலும், யுடியூப்பில் பதிவிடப்பட்டிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை பலரும் டிஸ்லைக் செய்துள்ளனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழு எத்தனை பேர் டிஸ்லைக் செய்துள்ளனர் என்பது பார்க்கும் வசதியை மறைத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here