பாலி கடற்பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்: மலேசியாவிற்குச் சுனாமி ஆபத்து இல்லை!

கோலாலம்பூர்:

ந்தோனேசியாவின் பாலி கடற்பகுதியில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவான மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், இந்த நிலநடுக்கம் 7.2 டிகிரி தெற்கு மற்றும் 117.2 டிகிரி கிழக்கில், பூமிக்கு அடியில் 499 கிலோமீட்டர் ஆழத்தில் மையம கொண்டிருந்தது என்றும், இது இந்தோனேசியாவின் மடாரம் (Mataram) நகருக்கு வடகிழக்கே சுமார் 194 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது என்றும் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தினால் மலேசியாவிற்கு எந்தவிதமான சுனாமி அச்சமும் அல்லது ஆபத்தும் இல்லை என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here