பிரேசில் நாட்டில் கனமழை; பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு

பிரேசில், ஜனவரி 31:

பிரேசிலின் தென்கிழக்கு மாநிலமான சாவ் பாவ்லாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தின் ஆளுநர் ஜோவ் டோரியா கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய டூவிட்டர் பதிவில் ஜோவ் டோரியா, ‘சாவ் பாவ்லாவில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மிகுந்த வருத்தத்துடன் பார்வையிட்டு வருகிறேன். உயிரிழந்த 18 பேரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம், மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானவை வளங்களை வழங்க எனக்கு அதிகாரமிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

பிரேசிலில் தென்கிழக்கு பகுதி மாநிலங்களில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில் மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக 19 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here