உலக சுகாதார அமைப்பின் ‘கோவாக்ஸ்’ கூட்டணியில் சீனா

கொரோனா தடுப்பூசிகளை அனைத்து நாடுகளுக்கும் சரிசமமாகப் பகிா்ந்து விநியோகிப்பதற்காக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு அமைத்துள்ள ‘கோவாக்ஸ்’ கூட்டணியில் சீனாவும் அதிகாரப்பூா்வமாக இணைந்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஹூவா சன்யிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கோவாக்ஸ் திட்டத்தில் சீனா அதிகாரப்பூா்வமாக இணைவதற்கான ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் சீன அரசும் தடுப்பு மருந்துகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான சா்வதேசக் கூட்டணி (கவி) அமைப்பும் கையெழுத்திட்டுள்ளன.

அனைத்து தரப்பினருக்கும் மருத்துவ வசதிகள் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டும் என்ற கோட்ப்பாட்டுக்கு செயல் வடிவம் கொடுப்பதில் சீனா எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை இதுவாகும்.

கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் சரிசமமாக விநியோகிக்கப்படுவதில் சீனா கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவின் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் வளரும் நாடுகளைவிட வளா்ச்சியடைந்த நாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படுவது தவறான கருத்து,

தற்போதைய நிலையில், கொரோனா நோய்த்தொற்று உலகின் அனைத்து நாடுகளையும் சோந்த அனைவருக்கும் மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, எங்களது தடுப்பூசிகள் பாரபட்சமின்றி, குறிப்பாக வளரும் நாடுகளுக்கு விநியோகக்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதற்காக, கோவாக்ஸ் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்றாா் ஹுவா சன்யிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here