அம்னோ சட்டமன்ற உறுப்பினர் பேராக் மந்திரி பெசாரின் அரசியல் செயலளாராக நியமனம்

ஈப்போ: பேராக் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அஹ்மட் பைசல் அஸுமு அம்னோவின் பெங்காலான் ஹுலு சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அஸ்னெல் இப்ராஹிமை தனது அரசியல் செயலாளராக நியமித்துள்ளார்.

இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று பைசல் கூறினார். ஜெரிக் அம்னோ துணைத் தலைவரான அஸ்னெல், பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) துணைத் தலைவராக தனது பொறுப்பு தொடர்பான விஷயங்களை நிர்வகிக்க ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அவர் கூட்டாட்சி மட்டத்திலும் விஷயங்களைக் கையாள்வார். பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கத்தில் அம்னோவுடனான ஒத்துழைப்புக்கான எனது உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும். நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியும் என்பதை உறுதிசெய்கிறது.

அவரது நியமனம் பெரிகாத்தானில் உள்ள பெர்சத்து அம்னோ மற்றும் கூறு கட்சிகளுக்கு இடையிலான உறவுகளையும்ப் ஒத்துழைப்பையும் பலப்படுத்தும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் திங்களன்று (அக். 12) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here