இனி அதிவேக ரயில்களில் அனைத்தும்…

‘மணிக்கு, 130 கி.மீ.,க்கு அதிகமான வேகத்தில் இயக்கப்படும், அதிவேக ரயில்களில், இனி, அனைத்து பெட்டிகளும், ‘ஏசி’ வசதி உடையதாகவே இருக்கும்’ என, ரயில்வே மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர், டி.ஜே. நாராயணன் கூறியுள்ளதாவது:தற்போது, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், அதிகபட்சமாக, மணிக்கு, 80 – 110 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகின்றன.

மாற்றம்ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற அதிவேக ரயில்கள், அதிகபட்சம், மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களை, 130 – 160 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்க முடியும். அதற்கு ஏற்ற வகையில், ரயில் பாதைகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்படுகின்றன.மணிக்கு, 130 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்கப்படும் ரயில்களில், அனைத்து பெட்டிகளும், ‘ஏசி’ வசதி உடையதாக இருக்க வேண்டியது, தொழில்நுட்ப ரீதியில் அவசியமாகிறது. அதனால், மணிக்கு 130 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும், இனி, அனைத்து பெட்டிகளும், ‘ஏசி’ வசதி உடையதாகவே இருக்கும்.

கட்டணம் எப்படி?கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில், ‘ஏசி’ பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தாண்டு, 100 பெட்டிகளும், அடுத்தாண்டு 200 பெட்டிகளும் தயாரிக்கப்பட உள்ளன.தற்போது பயன்பாட்டில் உள்ள துாங்கும் வசதி உடைய பெட்டியில், 72 இருக்கைகளே இருக்கும். அதே நேரத்தில், ‘ஏசி’ பெட்டியில், 83 பேர் பயணிக்க முடியும். அதிவேக ரயில்களில், அனைத்து பெட்டிகளும், ‘ஏசி’ வசதி உடையதாக இருந்தாலும், கட்டணம் மிக அதிகமாக இருக்காது. சிறந்த வசதிகள் கிடைப்பதுடன், பயண நேரம் குறையும்.இவ்வாறு, அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here