டிரம்ப் பிரசாரத்தில் விதிமீறல்; கேள்விக்குறியான சமூக இடைவெளி

கொரோனா வைரஸ் ஏற்பட்டதால் நிறுத்திவைத்த அதிபர் பதவிக்கான பிரசாரத்தை, ஒன்பது நாட்களுக்குப் பின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் துவங்கினார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். எதிர்க்கட்சிகளும், பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பிரசாரக் கூட்டம்அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு, சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு உள்ளது உறுதியானது.

ராணுவ மருத்துவமனையில், டிரம்ப் சிகிச்சை பெற்றதால், பிரசாரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் வீடு திரும்பிய டிரம்ப்பைக் காண, தொண்டர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். தேர்தல் பிரசாரக் கூட்டம் போல், இது அமைந்திருந்தது. வெள்ளை மாளிகையின், ‘பால்கனி’யில் இருந்து டிரம்ப், தொண்டர்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.20 நிமிடம் நடந்த இந்த நிகழ்ச்சி, கொரோனா பாதிப்புக்குப் பின், டிரம்ப் பங்கேற்ற, முதல் பொது நிகழ்ச்சியாக அமைந்தது.மக்களைப் பார்த்ததும், தன் முக கவசத்தை எடுத்துவிட்டு, அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இப்போது மிகவும் நலமாக உள்ளேன்.

அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் மிகவும் விரும்புகிறேன். தடைகளைத் தாண்டி வாருங்கள்; ஓட்டுப் போடுங்கள்.சீனா உருவாக்கிய இந்த வைரசை நாம் வெற்றி கொள்வோம். அதற்கு எதிராக மிகவும் சிறந்த தடுப்பூசி மற்றும் மருந்துகளை தயாரிக்கும் முயற்சி தீவிரமாக உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.கடும் எதிர்ப்புஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டர்களில் பெரும்பாலானோர், முக கவசம் அணிந்திருந்தனர். சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை.பொது நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்றதற்கு, ஜோ பிடன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

”அமெரிக்க மக்களின் உடல்நலம், பாதுகாப்பு குறித்து தனக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதை, டிரம்ப் மீண்டும் நிரூபித்துள்ளார்,” என, அவர் கூறினார்.’வைரஸ் ஏற்பட்டு, அதில் இருந்து மீண்ட பின், குறைந்தபட்சம், 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என, டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், அதை டிரம்ப் மீறியுள்ளார்’ என, பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.’வெள்ளை மாளிகையில் நடந்த நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியின்போதுதான், வைரஸ் பரவியிருக்க வேண்டும். ‘இந்த நிலையில், டிரம்ப் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பது, வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்திவிடும்’ என, சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.தீர்வு ஏற்படும்!ஜோ பிடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், வெளிநாட்டினருக்கு அமெரிக்க குடியுரிமை அளிக்கும், ‘கிரீன் கார்டு’ பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என, முழுமையாக நம்புகிறோம். ஒரு நாட்டைச் சேர்ந்தோருக்கு குறிப்பிட்ட அளவு கிரீன் கார்டு வழங்கும் நிபந்தனை நீக்கப்படும்.

அவ்வாறு செய்தால், அதிக அளவில் இந்திய நிபுணர்களின் சேவையை, அமெரிக்கா பெற முடியும்.-ராஜா கிருஷ்ணமூர்த்தி, எம்.பி., ஜனநாயகக் கட்சிபெரிய தவறு!எப்போதும் துாங்கி வழியும் ஜோ பிடன் இந்த நாட்டை சிறப்பாக வழிநடத்துவார் என நினைத்தால், அது மிகப் பெரிய தவறு. அவர்,எம்.பி.,யாக, துணை அதிபராகஇருந்தபோது, நம் நாட்டின் பல வேலைகளை, சீனாவுக்கு அளித்து விட்டார்.- டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர்டிரம்பால் பரவாதுவெள்ளை மாளிகை டாக்டர் சீன் கான்லே கூறியதாவது:கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டத்தில் இருந்து, 10 நாட்கள் மற்றும் காய்ச்சல் முழுமையாக குறைந்ததில் இருந்து, 24 மணி நேரத்திற்குப் பின், இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதற்கான சாத்தியம் இல்லை. அந்த வகையில், அதிபர், டிரம்பை பரிசோதனை செய்ததில், அவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதற்கான சாத்தியம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here