மன அழுத்தம் போக்க போனில் பேசலாம்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா கைப்பேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று குறித்து ஏற்படும் பதட்டம், மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு குறித்து மனநல ஆலோசனை வழங்க கடலூர் மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொற்றுசிகிச்சைக்குப் பின்னர் மனதளவில் மீண்டு, பூரண மனநலம் மற்றும் உடல்நலம் பெறவும் வழிகாட்டுதல் பெறலாம். கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் (epsyclinic) தன்னார்வ அமைப்புடன் இணைந்து தகுதி வாய்ந்த உளவியலாளர்களைக் கொண்டு 24 மணி நேரமும் மனநல ஆலோசனைகளை வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை கட்டணம் ஏதுமின்றி செயல்படுத்தப்படுகிறது.

கடலூர் மாவட்ட பொதுமக்கள், 95554-00900 என்ற கைபேசி எண் மூலம் ஆலோசனை பெறலாம்.

கைபேசி எண்ணை டயல் செய்த உடன் மொழி விருப்பத் தேர்வு குறித்து தானியங்கி குரல் பதிவின் மூலம் தொடர்புடைய எண்ணை அழுத்த தெரிவிக்கப்படும். தமிழில் தொடர்பு கொள்ள எண்.7 ஐ அழுத்த வேண்டும். விரும்ப மொழிதேர்வு எண்ணை அழுத்தி தொடர்பினைப் பெற்று ஆலோசனை பெறலாம்.

மின்னஞ்சல் உரையாடல்

இதே போல் “cuddalore.epsyclinic.com’ என்ற இணைய தள முகவரியில் மின்னஞ்சல் உரையாடல் மூலம் ஆலோசனை பெறலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here