அன்வார் மீதான புகார்: விசாரணை ஒத்தி வைப்பு

கோலாலம்பூர்: பி.கே.ஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் காவல்துறையினருடன் இன்று நடைபெறவிருந்த விசாரணை ஒத்தி வைக்கப்படதாக என்று ஆணையர் டத்தோ ஹுசிர் முகமது தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை (அக். 12) காலை 11 மணிக்கு போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரை விசாரணைக்கு வருமாறு போலீசார் ஆரம்பத்தில் அழைப்பு விடுத்ததாக புக்கிட் அமான் சிஐடி இயக்குனர் தெரிவித்தார்.

இருப்பினும், செவ்வாய்க்கிழமை (அக். 13) காலை 9 மணிக்கு மட்டுமே அவர் வர முடியும் என்று அவரது அந்தரங்க செயலாளரால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதனால், அவரது அறிக்கையை பதிவு செய்வதற்கு நாங்கள் தாமதப்படுத்தியுள்ளோம். அது பின்னர் தீர்மானிக்கப்படும் என்று அவர் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அன்வாருக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் 121 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சமூக ஊடகங்களில் பரப்பியது தொடர்பான வழக்கை காவல்துறை விசாரித்து வருவதாக ஹுசிர் தெரிவித்தார்.

அக்., 8 இல் ஜெராண்டூட் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கல் செய்த புகாரில் தொடங்கி, இந்த விவகாரம் தொடர்பாக ஆறு போலீஸ் புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன.

தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் நாங்கள் விசாரிக்கிறோம் என்று அவர் கூறினார்.

ஜெராண்டூட்  நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அஹ்மத் நஸ்லான் இட்ரிஸ் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினர்  பட்டியல் குறித்து செய்தி பரவியதால் பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்று கம் ஹுசிர் நினைவுபடுத்தினார்.

சரிபார்க்கப்படாத செய்திகளை பரப்ப வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மக்களை குழப்பக்கூடிய போலி செய்திகள் அல்லது சரிபார்க்கப்படாத செய்திகளை பரப்பும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here