மருத்துவ நிபுணர்கள் அதிகரிக்கப்படவேண்டும்- எம்எம்ஏ

அரசு மருத்துவமனைகளில் நிபுணர்களின் பற்றாக்குறை, தாமதத்திற்கு வழிவகுத்தது என்று மலேசிய மருத்துவ சங்கத்தின் (எம்.எம்.ஏ) தலைவர் பேராசிரியர்   டத்தோ டாக்டர் எம். சுப்பிரமணியம் தெரிவித்தார்.

பயிற்சி மருத்துவ  வேலைக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்க நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.

ஒரு நிபுணராக ஆக சுமார் 10 ஆண்டுகள் ஆகும். அரசாங்கம் மருத்துவர்களுக்கு நான்கு ஆண்டு ஒப்பந்தத்தையும், பயிற்சிப் பணிக்கு இரண்டு ஆண்டுகளையும், மருத்துவ அதிகாரியாக இரண்டு ஆண்டுகளையும் வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

அதன்பிறகு, கிடைக்கக்கூடிய இடங்கள் இருந்தால், அந்த நபர் தொடர்ந்து அரசாங்க சேவையில் பணியாற்றி வரலாம். மேலும் ஒரு நிபுணராகவும் மாறலாம்.

நிபுணர்களாக ஆவதற்கு ஆர்வம் காட்டியவர்களின் ஒப்பந்தங்களை நீட்டிக்குமாறு எம்.எம்.ஏ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் பல தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும், அத்தகைய பயிற்சியை அங்கு செய்ய முடியாது, ஏனெனில் நோயாளிகள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .

ஒரு மருத்துவர் ஒரு நிபுணராக மாறுவதற்கு இணையாக  பயிற்சியே சரியான பாதை என்பதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும், மேலும் உள்ளூர் மருத்துவர்கள் தங்கள் நிபுணத்துவப் பயிற்சியை வெளிநாட்டில் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பயிற்சிப் பணியாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பயிற்சியளிப்பதற்கான வேலைவாய்ப்புகளை வழங்குவதில் அரசாங்கம் நிதிச் சுமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று சுப்பிரமணியம் சுட்டிக்காட்டினார்.

எம்.எம்.ஏ அதிகாரத்தை முன் வைக்கவில்லை. ஆனால், மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசு, சுகாதார அமைச்சகத்துடன் நெருக்கமாக செயல்படும் ஒரு சங்கம் என்று அவர் கூறினார்.

மலேசியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 5,000 மருத்துவ மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள், இது 450 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தை அடைய நாட்டிற்கு உதவும். இது உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை விட சிறந்தது.

டாக்டர்களில் சமமற்ற நோக்கம் உள்ளது, ஏனெனில் பலர் கிராமப்புறங்களில் சேவை செய்ய விரும்பவில்லை, குடும்பம், வயதான பெற்றோர்கள் கவனிப்பு என்று சில காரணங்களைக்  குறிப்பிடுகின்றனர்.

சபா, சரவாக் கிராமப்புறங்களில் பிரச்சினை மோசமாக உள்ளது. கிராமப்புறங்களில் சேவை செய்ய மிகவும் திறமையான மருத்துவர்களை அனுப்ப வேண்டும் என்று டத்தோ டாகடர் சுப்பிரமணியம் பரிந்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here