கிம்மாவின் ஏற்பாட்டில் இந்திய முஸ்லீம் சங்கங்களுடான சந்திப்பு

கிம்மாவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ சைட் இப்ராஹிம் தலைமையில் நாட்டிலுள்ள இந்திய முஸ்லீம் சங்கங்களை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் மலேசியன் முஸ்லீம் இளைஞர் கிளப் அமைப்பினரை (எம்எம்ஒய்சி) சந்தித்தோம். இச்சந்திப்பு கூட்டத்தில் கிம்மாவை பிரதிநிதித்து அதன் தேசியத்தலைவர், துணைத்தலைவர் ஹரிஸ் சிராஜுடின், உதவித்தலைவர் டத்தோ அமாட் சகாட், செயலாளர் உசேன் ஜமால், கொள்கை பரப்பு செயலாளர் அஸ்ராப் @ மைடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எம்எம்ஐசி சார்பில் தலைவர் முகமட் அஸ்மி, ஆலோசகர் முகமட் ஹஸ்ரி மற்றும் செயலவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் இந்திய முஸ்லீம் சமுதாயத்தின் நலன் மற்றும் மேம்பாடு குறித்து பேசப்பட்டது. மேலும் இன்றைய இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றும் விவாதிக்கப்பட்டது.

இந்திய முஸ்லீம் சமூகத்திற்கென்று கிம்மா என்ற கட்சி மட்டுமே இருப்பதால் அரசு சாரா இயக்கங்களும் இணைந்து வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் இந்திய முஸ்லீம் சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெறுவோம் என்று டத்தோஶ்ரீ சைட் இப்ராஹிம் கேட்டு கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here