ஜோகூர் தேர்தல்: திருமண மேடையிலிருந்து நேராக வாக்குச்சாவடிக்கு வந்த தம்பதி!

கோத்தா திங்கி:

ஜோகூர் மாநிலத் தேர்தலில், கோத்தா திங்கியில் 24 வயதுடைய புதுமணப்பெண் ஒருவர் தனது திருமண ஆடையுடனேயே வந்து வாக்களித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மணமகள் பிஃபி நூர் கைரின் தம்ரின் (24), இன்று காலை 9 மணியளவில் தமக்குத் திருமணம் நடந்து முடிந்த கையோடு, மணமகன் முகமட் ஆரிஃபுடன் காலை 10 மணிக்கெல்லாம் எல்கேடிபி சுங்கை சாயோங் (LKTP Sungai Sayong) தேசியப் பள்ளி வாக்குச் சாவடிக்கு வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.

“கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே எங்கள் திருமணத் தேதி குறிக்கப்பட்டுவிட்டது. அது தற்செயலாக ஜோகூர் தேர்தல் தேதியுடன் ஒரே நாளில் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், ஒரு குடிமகளாக நாட்டுக்கான சரியான தலைவரைத் தேர்ந்தெடுக்கும் கடமை திருமணத்தை விடவும் முக்கியமானது என்பதால் உடனே வாக்களிக்க வந்தோம்,” என மணமகள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்பாசிர் ராஜா (Pasir Raja) சட்டமன்றத் தொகுதியில், பாரிசான் நேஷனல் (BN) சார்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அடாம் பாபா, பாக்காத்தான் ஹரப்பான் (PH) மற்றும் பெரிகாத்தான் நேஷனல் (PN) ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here