சுற்றுலா திட்டப் பணிகள் அமைச்சர் ஆய்வு

கிருமாம்பாக்கம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா திட்டப் பணிகளை, அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்தார். புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில், மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ், கிருமாம்பாக்கம் ஏரியில், 5 கோடியே 26 லட்ச ரூபாய் செலவில், நவீன சுற்றுலா தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

சிறுவர் பூங்கா, ரெஸ்ட்டாரண்ட், நவீன படகு குழாம், கரைகள் அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், அமைச்சர் கந்தசாமி நேற்று கிருமாம்பாக்கம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன சுற்றுலா திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, ரெஸ்ட்டாரண்ட் கட்டுமான பணிகளை பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடித்து திறப்பு விழா செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். மேலும், மத்திய கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையர் அலுவலக உதவி இயக்குனர் வினோத்குமாருடன், அமைச்சர் கந்தசாமி, கிருமாம்பாக்கம் ஏரியில் சுற்றுலா திட்டத்தின் மூலமாக கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையில், கடைகள் அமைத்து தருவது குறித்து ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது, பொதுப் பணித்துறை சிறப்பு கட்டட பிரிவு செயற்பொறியாளர் ரமணி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here