பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய சட்டம் – திரிஷா

யுனிசெப் அமைப்பில் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக நடிகை திரிஷா இருக்கிறார். குழந்தை திருமணம், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து இணையதளம் வழியாக யுனிசெப் களப் பணியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா காலத்திலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை துணிச்சலுடன் மேற்கொண்ட பணியாளர்களை பாராட்டுகிறேன். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கும், தொன்றுதொட்ட கலாசாரமாய் இருந்துவரும் குழந்தைகள் திருமணத்திற்கு எதிராகவும் நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்க ஒரு பாதுகாப்பு வளையம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதிகாரத்தில் முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்கள், வளரிளம் பெண்களின் குரலுக்கு செவிசாய்த்து அவர்களின் கல்வி மற்றும் திறன்களில் சிறந்த உலகத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பாலின அடிப்படையிலான வன்கொடுமை, மற்றும் குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய சட்டம் குறித்து ஆராய வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here