சீனா: சட்டவிரோதக் குளவி வளர்ப்பு; இரண்டு குழந்தைகள் பலி!

கோலாலம்பூர்:

சீனாவின், யுனான் (Yunnan) மாகாணத்தில், ஒரு குளவித் தாக்குதலில், இரண்டு மற்றும் ஏழு வயதுடைய, இரு சகோதரர்கள், பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள், தங்கள்ப் பாட்டியின், சோள வயலுக்கு அருகில், பைன் மரக்காட்டிற்குள் (pine woods) சென்றபோது, நூற்றுக்கணக்கானக் குளவிகளால், கொட்டப்பட்டனர்.

இந்தத் துரதிர்ஷ்டவசமானச் சம்பவத்தில், அக்குழந்தைகளை, காப்பாற்ற, மேற்கொள்ளப்பட்ட, தீவிர முயற்சிகள், பலனளிக்கவில்லை. இதில், அக்குழந்தைகள், மொத்தமாக 1,000-க்கும் மேற்பட்டக் கொட்டுக்களால், பாதிக்கப்பட்டது, தடயவியல் நிபுணர்களால், உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டப் சிறுமி சம்பவ இடத்திலேயே, உயிரிழந்த, அவரது இரண்டு வயது சகோதரன், அடுத்த நாள், மருத்துவமனையில், உயிரிழந்தார்.

இதனால், `செஜியாங்’ (Zhejiang) மாகாணத்திற்கு புலம்பெயர்ந்து பணிபுரிந்து வந்த, அவர்களின் பெற்றோர், மிகுந்த மன உளைச்சலுக்கு, ஆளாகினர்.

இதனிடையே, உணவிற்காக, சட்டவிரோதமாகக், குளவிகளை, வளர்த்து வந்த, உள்ளூர் விவசாயி லி (Li), கவனக்குறைவால், ஏற்பட்ட மரணத்திற்காக, தடுத்து வைக்கப்பட்டு. பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து லி, பாதிக்கப்பட்டக் குடும்பத்திற்கு, 40,000 யுவான் இழப்பீடு வழங்கியதுடன், அந்தக் குளவிகளையும், அளித்துள்ளார்.

இதையடுத்து, அதிகாரிகள், குளவி வளர்ப்புக்கு, தடை விதித்ததுடன், இதுபோன்றச் சோகங்களைத் தடுக்க, அப்பகுதி முழுவதும், ஆய்வுகளை, தொடங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here