இறப்பை முன்பே கணித்து, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்….

சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாரித்துள்ள சம்பவம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பொதுவாக இறந்தவரின் உறவினர்கள் தான் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயார் செய்வார்கள். ஆனால் சென்னையை சேர்ந்த 72 வயதான கார் ரேலி ரேஸர் எஜ்ஜி கே.உமாமகேஷ் என்பவர் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ரெடி செய்துவிட்டு இறந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அந்த இரங்கல் அறிவிப்பு பரவலாக பகிரப்பட்டு வருவதோடு நெட்டிசன்கள் மத்தியில் விவாதப் பொருளாகவும் அமைந்துள்ளது. கடந்த 16ஆம் தேதி உயிரிழந்த உமாமகேஷ் அதற்கு முன்னதாகவே தன் கைப்பட எழுதிய இரங்கல் கடிதத்தை தனது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார் .

அந்த இரங்கல் குறிப்பில், அன்பான நண்பர்களே , பகைவர்களே, இரண்டுக்கும் மத்தியில் உள்ளவர்களே, என்னுடைய அற்புதமான வாழ்நாளில் பங்கெடுத்துக் கொண்டமைக்கு நன்றி . எனது பார்ட்டி முடிந்து விட்டது . இதில் யாரையும் ஹேங் ஓவர் நிலையில் நான் விட்டுச் செல்லவில்லை என நம்புகிறேன் .

எல்லோருக்குமான நாட்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது . சந்தோஷமாக வாழ்ந்து உங்களது பார்ட்டியை கொண்டாடுங்கள் . சியர்ஸ் சொல்லி விடை பெறுகிறேன் . உங்கள் எஜ்ஜி என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here