மோட்டார் சைக்கிள் திருட முயன்ற இரு ஆடவர் கைது

நேற்று (17.10.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீசாருக்கு இரண்டு பேர் மோட்டார் சைக்கிளை திருட முயல்வதாக பெற்றபட்ட புகாரினை பெற்றனர்.

புகார் வழங்கிய மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மலாயா பல்கலைக்கழகத்தில் போலீஸ் பந்துவானாக பணியாற்றி வருபவர். வேலை முடிந்து வீட்டிற்கு செல்லவிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளை இருவர் திருட முயல்வதைக் கண்டு தனது நண்பரை அழைத்து இருவரும் இணைந்து யமாஹா 125 மோட்டார் சைக்கிளை திருட முயன்றவர்களை பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் திருட பயன்படுத்தப்படும் பொருட்களை கைப்பற்றியதோடு அதில் உடல் சூடு அதிகமாக இருந்ததோடு இருமலுடனும் இருந்ததார். அவர் கிரிஞ்சி பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்ட கோவிட் -19 பிங்க் கலர் கைப்பட்டை அணிந்திருந்தவருடன் நெருக்கமாக இருந்ததாக அறியப்படுகிறது.

பிடிப்பட்டவர் மீதும் கோவிட்-19 சோதனை நடத்தப்பட்டிருக்கிறது என்றும் மற்றொருவர் உதட்டில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் இருவர் மீதும் ஏற்கெனவே போதைப் பொருள் தொடர்பான குற்றப்பதிவு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

செக்‌ஷன் 379 (a) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் செக்‌ஷன் 511 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று பிரிக்பீல்ட்ஸ் வட்டார போலீஸ் தலைவர் ஜைருல் நிஜாம் பின் முகமது ஜைனுடின் @ ஹலிம் தெரிவித்தார்.

பொதுமக்கள் இது போன்ற தகவல் அறிந்தவர்கள் அவசர எண்ணான 999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.  மேலும் அவர் கூறுகையில் அரசாங்கம் விதித்த சிஎம்சிஓவை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here