7 மாதங்களுக்கு பிறகு மக்காவில் தொழுகைக்கு அனுமதி

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இஸ்லாத்தின் புனித இடமான மக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, ஏழு மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக சவுதி அரேபியா தனது குடிமக்களையும், நாட்டிற்குள் வசிப்பவர்களையும் மக்காவில் தினசரி தொழுகை நடத்த நேற்று அனுமதி அளித்து உள்ளது.

நவம்பர் 1 முதல், உம்ரா செய்ய பாதுகாப்பானதாகக் கருதப்படும் குறிப்பிட்ட நாடுகளின் பயணிகளை மட்டும் சவுதி அரேபியா அனுமதிக்கும், இது கொரோனா வைரஸால் ஏற்படும் ஆபத்து நீங்கும் வரை இருக்கும் என சவூதி செய்தி நிறுவனமான எஸ்பிஏ கடந்த மாதம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here