இருட்டு அறையில் அடஞ்சு கிடக்கும் ஸ்ருதி ஹாசன்!

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.

சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார். எனினும் எந்தவித டென்க்ஷனும் இன்றி சிங்கிள் பெண்ணாக ஜாலியாக சுற்றி வருகிறார்.

இந்நிலையில் சமீப நாட்களாக இருட்டு அறைக்குள்ளேயே வித விதமாக போஸ் கொடுத்து எக்ஷ்பிரெஷனில் மிரட்டி எடுக்கிறார். இந்த புகைப்படத்தில் இருக்கும் ஸ்ருதியை கண்டு ரசிகர்கள், என்னமா உங்க அப்பா வெளியில் பிக்பாஸ் நடத்துற மாதிரி உன்னையும் ஏதாச்சும் ரூம் உள்ளவே அடச்சு வச்சிட்டாரா..? என கிண்டல் அடித்து வருகின்றனர்.

View this post on Instagram

Party of 1 🌚

A post shared by Shruti Haasan (@shrutzhaasan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here