“எனக்கு பயமா இருக்கு” பேய்மாமா பட இசை வெளியீடு

தனக்கு பேய் மாமா படத்தில் கதாநாயகனாக நடித்தது அச்சத்தை கொடுத்துள்ளதாக நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் அரும்பாக்கம் பகுதியில் அமையப்பெற்றுள்ள தனியார் ஹோட்டலில் வைத்து யோகி பாபு நடித்த பேய்மாமா படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, இயக்குனர் மிஸ்கின், நடிகர் யோகிபாபு, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய யோகி பாபு கூறுகையில், “எனக்கு ஹீரோ முகம் கிடையாது. ஆனால் என்னை கதாநாயகனாக இயக்குனர் சக்தி சிதம்பரம் நிறுத்தியுள்ளார்.

இது எனக்கு மிகுந்த அச்சத்தை கொடுக்கிறது. வடிவேல் அவர்கள் ஒரு மேதாவி. பேய்மாமா கதை அவருக்காக எழுதப்பட்டது. அதன்பிறகு எனக்காக மாற்றி எழுதப்பட்டது. சம்பள விவகாரத்தில் நான் கடுமையாக நடந்து கொள்வதில்லை. சமீபத்தில்கூட ஒரு உதவி பெண் இயக்குனரின் படத்தில் எந்த சம்பளமும் இல்லாமல் நடித்துக் கொடுத்தேன்” எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here