உடல் நல குறைவினால் சிகிச்சை பெற சென்ற பெண் கிளினிக் வாசலில் மயங்கி விழுந்து பலி; சோதித்ததில் அப்பெண்ணுக்கு கோவிட் தொற்று என உறுதி

கிள்ளான்: உடல்நல குறைவினால்  சிகிச்சை பெற கிளினிக் சென்ற  ஒரு பெண் சரிந்து விழுந்து இறந்தார். பின்னர் அவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  தாமான் செந்தோசாவில் அமைந்துள்ள கிளினிக்கிற்கு வெளியே அதே நாள்  இரவு 9.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக தெற்கு கிளாங் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி.சம்சுல் அமர் ராம்லி தெரிவித்தார்.

நேற்று இரவு அவர் கிளினிக்கிற்கு வெளியே கிடந்த பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

தாமான் செந்தோசாவில் உள்ள ஒரு பாலிகிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற அந்த பெண் தனது தங்கையுடன் சென்றதாக சம்பவம் குறித்து போலீசாருக்கு அறிக்கை கிடைத்தது. கிளினிக்கின் முன்புறம் வந்ததும், அந்த பெண் திடீரென சரிந்து விழுந்து மயக்கமடைந்தார் என்று ஏசிபி சம்சுல் அமர் கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்த துணை மருத்துவர்கள் வந்து அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர். பின்னர் உடல் ஆம்புலன்சில் ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, பின்னர் ஆன்டிஜென் விரைவான சோதனை முடிவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு கோவிட் -19 தொற்று  என்று கண்டறியப்பட்டது.

பெண்ணுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளது, மேலும் அவரது மரணம் திடீர் இறப்பு அறிக்கை (எஸ்டிஆர்) கோவிட் -19 என வகைப்படுத்தப்பட்டுள்ளது  என்று ஏசிபி ஷம்சுல் அமர் கூறினார்.

 தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை கோவிட் -19 நோயாளிகளால் அதிகமாக இருப்பதால், தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கிள்ளான் மாவட்டமும் ஒன்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here