பாதிக்கப்பட்டுத் தேறியவர்கள் குழுவாகச் செயல்படலாம்

கோவிட்-19 தொற்றில் தப்பிப்பிழைத்தவர்கள் உத்தியோகப்பூர்வ ஆதரவுக் குழுவொன்றை உருவாக்க வேண்டும் என்ற ஆலோசனையை சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வரவேற்றுள்ளார்.  மேலும் அவர்களுக்கு வழிகாட்டவும் தேவைப்பட்டால் ஆலோசனைகளை வழங்கவும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

கோவிட் -19 தப்பிப்பிழைத்தவர்கள் வைரஸை எதிர்த்துப் போராடுவதில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் அவர்கள் மனச் சோர்வை எவ்வாறு சமாளித்தார்கள் என்பதையும் பகிர்ந்து கொள்வது நல்ல ஆலோசனையாக இருக்கும்  என்று அவர் கூறினார்.

கோவிட் நோயைக் கண்டறிவது குறித்து, பொதுமக்களிடமிருந்து  கருத்துகளைக் கையாளும்போது, ​​அவர்கள் எவ்வாறு வந்தார்கள், அவர்கள் கடந்து வந்த சிகிச்சைகள், அவர்களின் மனச்சோர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தங்கள் அனுபவங்களை வழிநடத்தவும் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தால் பயனாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் தனது தினசரி நேரடி ஒளிபரப்பு செய்தியாளர் கூட்டத்தில் பேஸ்புக் வழியாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here