பாலிங்:
கெடாவில் உள்ள கோலாக்கெட்டில் தாமான் டேசா பிடாராவில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 71 வயது முதியவரின் சடலம் தொடர்பில், அவரைக் கொலைசெய்ததாக நம்பப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
23 மற்றும் 25 வயதுடைய இரு சந்தேக நபர்களையும் விசாரணைக்கு உதவுவதற்காக இன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக 6 நாட்கள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாலிங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஷம்சுதின் மாமட் கூறினார்.
பாதிக்கப்பட்ட கண்ணன் சகாதேவன் என்ற முதியவர், நேற்று அவரது வீட்டில் கை,கால்கள் கட்டப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதன் பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இக்கைது மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.





















