கொரோனா தடுப்பூசி ’கோவேக்சின்’எப்போது அறிமுகம் செய்யப்படும்?

ஐதராபாத்: இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கொரோனா வைரசுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன. கோவேக்சின் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி, தற்போது 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது.
பரிசோதனைகளில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதம், தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளதாக, பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் சாய் பிரசாத் தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “  அவசர கால ஒப்புதலுக்கு மத்திய அரசு தயாராகலாம் என நான் நினைக்கிறேன். ஆனால் அதுபோன்ற ஒப்புதலுக்கு நாங்கள் முந்திச் செல்லவில்லை. அனைத்து விதமான பரிசோதனைகள் முடிந்த பின்னரே மருந்துகளை வெளியிட உத்தேசித்துள்ளோம்.அனைத்தும் சரியானபடி நடந்தால் 2021-ல் ஜூன் மாதம் மருந்து வெளியாகும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here