ஒரு 15 வயது பெண் ஊடகத்தில் சந்தித்த திடீர் ஆண் நண்பரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பல டீனேஜ் பெண்களுக்கு பாடமாக அமையும்
மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள லால்காட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு 15 வயதான பெண் எந்நேரமும் சமூக ஊடகத்தில் யாராவது ஒரு ஆண் நண்பரோடு அரட்டையடித்து வருவார்.அப்போது ஆதித்யா என்ற வாலிபர் அவரை ஊடகத்தில் நட்பு கொண்டார் .பிறகு இருவரும் நண்பராகி எந்நேரமும் ஊடகத்தில் அரட்டையடித்து வந்தார்கள் .
இந்நிலையில் திடீரென அந்த வாலிபர் ஆதித்யா அந்த பெண்ணிடம் தான் உன்னை நேரில் சந்தித்து சில கிப்ட் கொடுக்க வேண்டும் என்று கூறினார் .அதை உண்மையென நம்பிய அந்த பெண் தன்னுடைய பெற்றோர் இல்லாத நேரமாக பார்த்து அவரை வீட்டிற்கு வர சொன்னார் .அப்போது ஒரு கிப்ட் கொடுப்பது போல வீட்டிற்குள் நுழைந்த அந்த வாலிபர் அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்து கொண்டார் .பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அந்த வீட்டின் கதவுகளை அடைத்தார் .இதை கண்டு அந்த பெண் திகைத்தார் .அதற்குள் அந்த வாலிபர் அந்த பெண்ணை அந்த வீட்டிலிருந்த கட்டிலில் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார் . அதன் பிறகு அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய வீட்டாரிடம் அவர் கூறவில்லை .ஆனால் அந்த வாலிபர் மீண்டும் அந்த பெண்ணை உறவுக்கு அழைத்துள்ளார் .அதனால் அந்த பெண் கோபம் கொண்டு அந்த வாலிபர் செய்த பலாத்கார வேலையை தன்னுடைய பெற்றோரிடம் கூறினார் .பிறகு அவரின் பெற்றோர்கள் அந்த வாலிபர் மீது போலீசில் புகாரளித்தார்கள் .