சானிட்டசைரை வைத்து விளையாடியதால் விபரீதம்!

காஞ்சிபுரத்தில் சானிட்டைசரை வைத்து விளையாடிய சிறுவர்கள் மீது விபத்தாக தீ பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பதால் மாஸ்க் அணிவது, சானிட்டைசர் உபயோகிப்பது போன்றவை தொடர்ந்து வருகின்றன. இதனால் பரவலாக சானிட்டைசர் உபயோகம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது சானிட்டைசரை மரத்தில் ஊற்றி கொளுத்தி பார்த்துள்ளனர். அப்போது விபத்தாக தீ சிறுவர்கள் மீது பரவியது. இதனால் பதட்டமடைந்த அவர்கள் உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இந்நிலையில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சானிட்டைசர்களில் சிறிய அளவில் ஆல்கஹால் உபயோகிக்கப்படுகிறது. இது எரியும் தன்மை கொண்டது என்பதால் குழந்தைகள் இதுபோன்ற விபரீதமான விளையாட்டுகளை மேற்கொள்ளாமல் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here