முதல்வர் பழனிசாமிக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி!

முதல்வர் பழனிசாமிக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார்.அதன்படி தமிழகத்தில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.அதற்கு இயக்குனர் பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வருக்கு நன்றியை தெரிவித்தள்ளார்.

அந்த பதிவில், திரையரங்குகளை திறக்கவும், படப்பிடிப்பை அதிக எண்ணிக்கையிலான நபர்களுடன் நடத்தவும் அனுமதியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி அவர்களுக்கும், அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here