பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ப்ரியங்கா சோப்ரா. மாடலிங்கில் நுழைந்த ப்ரியங்கா சோப்ரா கடந்த 2000ஆம் ஆண்டு நடந்த மிஸ் வேர்ல்ட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியாளரானார். அதிலிருந்து ப்ரியங்கா சோப்ரா வின் மீது பலரது கவனம் விழுந்தது. மேலும் சினிமாவில் நுழைந்து பெரும் ரவுண்டு வருவார் என்றும் கணிக்கப்பட்டது.
அதன்படி முதல்முதலாக விஜய்யுடன் தமிழன் படத்தில் அறிமுகமானார் ப்ரியங்கா சோப்ரா. தமிழன் படத்தை கூடுதல் ஸ்டார் வேல்யூவுடன் கொடுக்க நினைத்த அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜிவி மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்று சென்சேஷனலாக இருர்ந்த ப்ரியங்காவை ஹீரோயினாக தேர்வு செய்தார். படம் சுமாரான ஹிட் என்றாலும் உலக அழகி நடித்திருக்கிறார் என்ற பெரும் விளம்பரம் அந்தப் படத்துக்கு ப்ரியங்கா சோப்ரா மூலம் கிடைத்தது.
பாலிவுட்டில் கலக்கிய ப்ரியங்கா சோப்ரா குவாண்ட்டிகோ என்ற தொடர் மூலம் ஹாலிவுட்டில் தடம் பதித்தார். அங்கும் தனது திறமையை அவர் நிரூபித்ததால் ஹாலிவுட்டில் செட்டில் ஆனார். மேலும் ஜோனாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் தற்போது சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இந்தியாவிலிருந்து ஹாலிவுட் சென்று வெற்றிக்கொடி நாட்டிய வெகு சிலர்களில் ப்ரியங்கா முதன்மையானவர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் ப்ரியங்கா சோப்ரா குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதா வது பிரபலமானவர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஏதேனும் ஒரு ப்ரா டெக்ட்டின் விளம்பரங்களை பதிவிடுவது உண்டு. அதற்காக அவர்கள் பணம் பெறு வதும் உண்டு. இந்த சூழலில் ப்ரியங்கா சோப்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஏதேனும் பிராண்டின் விளம்பரம் தொடர்பாக ஒரு போஸ்ட் போட மூன்று கோடி ரூபாய்வரை வாங்குகிறாராம். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சரியத் தின் உச்சத் துக்கு சென்றிருக்கின்றனர்.



கோலிவுட்டில்தான் தனது கேரியரை ஆரம்பித்தாலும் அதன் பிறகு ஏதோ காரணங் களால் தமிழில் அவர் நடிக்கவே இல்லை. அவர் 2003ஆம் ஆண்டு தி ஹீரோ – லவ் ஸ்டோரி ஆஃப் தி ஸ்பை என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி ஆனார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்க பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக முன்னணி நடிகையாக மாறினார் ப்ரியங்கா.















