சந்தோஷத்தில் உண்மையை உளறிய சமந்தா

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார். அதை தொடர்ந்து நான்காவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் ஒயில்ட் டாக் படப்படிப்பில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் நாகர்ஜுனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுத்துள்ளார்.

நாகர்ஜுனா இல்லாத நேரத்தில் அவரின் மருமகளான சமந்தா பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் தொகுத்து வழங்கினார். ஒயில்ட் டாக் ஷூட்டிங் இன்னும் முடியாததால் இந்த வாரமும், அடுத்த வாரமும் சமந்தா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார் சமந்தா. மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை கூட பார்த்தது இல்லை என்றார் சமந்தா.

சமந்தா கூறியதை பார்த்தவர்கள், சொந்த மாமனார் தொகுத்து வழங்கியும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்று சொல்கிறாரே என விமர்சித்துள்ளனர். சமந்தா அழகாக தொகுத்து வழங்குவதாக சிலரும், அவரை உடனே மாற்றுமாறு சிலரும் தெதரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்று கூறிய பிறகு இந்த சீசனின் அனைத்து எபிசோடுகளையும் மூன்றே நாட்களில் பார்த்து முடித்தாராம் சமந்தா. பிக் பாஸ் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்று தெரியாமல் சென்றால் நன்றாக இருக்காது என்று அப்படி செய்துள்ளார் சமந்தா.

ஒரு எபிசோடு கூட பார்க்கவில்லை என்று கூறிய ஒருவரை எப்படி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வைக்கலாம் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையே எப்படி இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மொக்கையாகத் தான் இருக்கிறது, இதை யார் தொகுத்து வழங்கினால் என்ன என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here