பயனர்கள் நீண்டகாலம் எதிர்பார்த்த வாட்ஸ் ஆப் வசதி விரைவில் அறிமுகம்!

குரல்வழி அழைப்புக்கள், வீடியோ அழைப்புக்கள் என்பவற்றினை இணையவழியாக மேற்கொள்வதற்கும் குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கும் மிகவும் பிரபலமான செயலியாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது. உலகெங்கிலும் பல மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இச் செயலியில் தற்போது மற்றுமொரு வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதாவது அழியக்கூடிய குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியாகும். இவ்வாறு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் 7 நாட்களின் பின்னர் தானாகவே அழிந்துவிடும்.

இவ்வசதி அறிமுகம் செய்வது தொடர்பான அறிவித்தல் நீண்ட காலத்திற்கு முன்னர் வெளியாகியிருந்த போதிலும் தற்போதைய தகவலின்படி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி Android, iOS, KaiOS, Web மற்றும் டெக்ஸ்டாக் அப்பிளிக்கேஷன்களில் இவ்வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here